தனியார் ஊடகம் ஒன்றின் ஊடாக நீதிமன்றத்தை பகிரங்கமாக விமர்சித்து நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வேன். என தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
காலியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவின் இந்த உரையினால் நீதிமன்றம் தொடர்பில் மக்கள் நம்பிக்கையிழந்து விடுவதுடன் நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பின் மீது மக்கள் நம்பிக்கைகொள்ள முடியாத நிலைமையொன்று ஏற்படும். அத்துடன் நாடும் பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றுவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காகவே விமலுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment