யாழ்.பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்காவிடினே, பல்கலைக்கழக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பாமையினாலே, பல்கலைக்கழகத்தை மூடி விட அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை யாழ்.பலக்லைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள நிலையிலேயே இதனையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நால்வர் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்ய்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதோடு புனர்வாழ்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியே மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment