விமானங்களை சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்படும் ரவைகள் மிஹிந்தலை வாவியில் இருந்து மீட்பு- பொலிஸ் பேச்சாளர்
விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படும் தூர இடங்களை இலக்குவைப்பதற்கும் பயன்படுத்தக்கூடியதுமான ஒருதொகை ரவைகள் மிஹிந்தலை, மஹகனந்தராவ வாவிப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கையில்,பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே ஹகனந்தராவ வாவி வழியாக அமைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதியின் பாலத்திற்கு அருகிலிருந்தே இவைகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
நேற்றையதினம் மாத்திரம் 300 எம்.பீ.எம்.ஜீ. வகை ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆம் திகதி எம்.பீ.எம்.ஜீ. வகை ரவைகள் 1192, டீ 56 ரக ரவைகள் 761 மீட்கப்பட்டிருந்தன.
நேற்றுக் கைப்பற்றப்பட்டவை 150 - 300 மீற்றர்வரை சென்று தாக்கக்கூடியது என பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 2000க்கும் மேற்பட்ட ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.. இந்த ரவைகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
0 comments :
Post a Comment