தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தரின் சடலம் பொலிஸாரால் மீட்பு
வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தர் ; ஒருவருடைய சடலம் ஒன்றை யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். இச்சடலம் கண்டி வீதி அரியாலைப் பகுதியில் இருந்து காலை சுமார் 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த கோ.உதயசீலன் வயது 27 என்றவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்..
0 comments :
Post a Comment