Monday, January 28, 2013

உதயன் பத்திரிக்கையுடன் இணைந்துபோக விரும்பாத அமைச்சர் டக்ளஸ் - வழக்கு வேண்டும் என நீதிபதியிடம் தெரிவிப்பு

உதயன் பத்திரிக்கைக்கு எதிராக பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவால் தாக்கல் செய்யப்பட்ட மானநஷ்ட வழக்கின் விசாரணைகள் இன்று யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவதற்காக தனது சட்டத்தரணி உடன் அமைச்சர் நீதிமன்றிற்கு சமூகமளித்திருந்தார்.

உதயன் பத்திரிகை சார்பாக அதன் ஆசிரியர் த.பிறேமானந் மற்றும் ஒன்லைன் ஆசிரியர் அனுராஜ் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

இதன்போது உதயன் பத்திரிக்கையுடன் இணைந்து போக விரும்புகிறீர்களா? என நீதிபதி அமைச்சரைக் கேட்ட போதும் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைகளை அடுத்த மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com