கிழக்கு மக்களுக்காக யாழ்ப்பாணத்தில் வெள்ள நிவாரணம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சேகரிக்கின்றது
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக யாழ்.நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிவாரணப் பொருட்களை சேகரிக்குமு; நடவடிக்கையென்றை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது.
கடும் மழையினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாகவே இந்நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையானது நாளை 30ஆம் திகதி காலை 8.30 மணி முதல் யாழ்.நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
0 comments :
Post a Comment