மூளாய்ப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மினிபஸ் விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் பரிதாபகமாக உயிரிழந்தார். மூளாய் ஆலடியைச் சேர்ந்த தம்பிராசா வைகுந்தவாசன் வயது 28 என்றவரே இவ்வாறு உயிரிழந்தவார் ஆவார் என வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு திரும்பிய சில நாட்களே சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. வேகமாக வந்த இவரது வாகனம் மினிபஸ் வருவதைக் கண்டு நிறுத்த முயற்சித்த போது அருகிலுள்ள பனை மரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment