அண்ணா மீது அளவு கடந்த பாசம் ,வறுமையின் கொடுமையால் ,இளம் பெண் தற்கொலை -கண்ணீர்ச் சம்பவம்
வறுமைய காரணமாகவும், அண்ணன் மீது வைத்திருந்த பாசம் காரணமாகவும் இளம் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் ஒன்று கொக்குவில் நேதாஜி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 25 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு தகப்பன் இல்லை. தாயுடன் மிகவும் கஸ்ரமான சூழ்நிலையில் வறுமையில் வளர்ந்துள்ளார்.
திருமணமான அண்ணாவிற்கு காய்ச்சல் வந்து மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார்.
அவரது மனைவியும் புறக்கணித்து தள்ளிய நிலையில், தங்கையே சென்று அவரைப் பார்த்து வந்துள்ளார். சுகமடைந்ததும் அண்ணாவை வீட்டிற்கு அழைத்து வர முடியாமல் மாமி ஒருவர் அண்ணாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால் மிகவும் மனம் உடைந்திருந்த இவர் கடன் தொல்லையையும் வறுமையையும் தாங்க முடியாமல் உறவினர் ஒருவருடைய வீட்டிற்கு சென்று தற்கெலை செய்து கொண்டுள்ளார்.
இவரது சடலம் கோப்பாய் பொலிஸாரால் மீட்க்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்ணன், தங்கை பாசத்தை நாம் எத்தனையோ படங்களில் சித்தரித்துப் பார்த்திருப்போம் ஆனால் இங்கே உண்மையில் இச்செய்தியைக் கேட்ட பலர் கண் கலங்கினார்கள்.
6 comments :
யுவதியின் ஆத்தா சாந்தியடைய பிரார்த்திர்கின்றேன். பிள்ளை தொங்குகின்ற படம் ஒன்று இருந்தால் எடுத்து இலங்கைநெற் பிரசுரிக்க வேண்டும். அப்போது அதை வைத்தும் புலம்பெயர் பினாமிகள் பணம் சம்பாதிப்பார்கள்.
இப்படியான வறுமையின் கொடுமை ஆட்கொண்டுள்ள குடும்பங்களுக்க்காவது புலம்பெயர் புலிப்பினாமிகள் பதுக்கி வைத்துள்ள பணத்தை கொடுக்கலாம் எல்லோ
யாழ்பாணத்தில இருந்து செத்த வீட்டு இணையத்திற்கு ஐரோவிலை கட்டணம் செலுத்தி மரண அறிவித்தல் கொடுக்கினம். ஆனால் பக்கத்து வீட்டிலை பஞ்சம் என்றால் பத்து ரூபா கொடுக்க மனம் வராது. வாழட்டம் இந்த சமுதாயதம்.
கொடுமையிலும் கொடுமை
Why we have the temples,churches,religious centres.What kind of preachings they do .Why not the well to do people change their minds and look towards the poor.You can do wonderful temple,church festivals spending thousands thousands of money.but our minds haven't changed,covered with complete illusion.Ego is not the matter.Symphathizing the poor is the important matter.No government think about the penniless &homeless.But preachings are wonderful and excellent that's all
தமிழ் இனத்திற்கு குரல் கொடுப்பதாக தெரிவித்து தங்களது பொக்கற்றுக்களை நிரப்பும் போலி தமிழ் பற்றாளர்களுக்கும் தமிழ் இனத்தின் அழிவுக்கு காரணமாக இருந்த புலிகளுக்கும் புலம்பெயர் வாழ் மக்கள் காசை இறைப்பதை நிறுத்திவிட்டு இவ்வாறான எழைகளுக்கு உதவிசெய்தால் அது தமிழ் இனத்தை காக்கும் செயல் என்பதை புரிந்து கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பம் இது.
இவ்வாறான சம்பவங்கள் .த.தே கூத்தமைப்புக்கு தெரியாதோ. த.தே கூத்தமைப்புக்கு கண்ணையும் காதையும் பின்புறத்திலா வைத்துக்கொண்டு திரியுது.
அவர்கள் அப்போதும் இப்போதும் புலிகளுடன் சேர்ந்து தமிழர்களை அழிப்பதையே நோக்காக கொண்டவர்கள் அல்லவா? இவர்களுக்கு அவ்வாறான விடயங்கள் தெரிய வாய்ப்பில்லை
The hero jaffna policians just bluff as usual and lead a very luxury life.They make travels even upto South Africa to talk about our politics,We see their James bond style actions,but they don't care about the people of Jaffna who are below to the poverty line.They should know that it is their part of duty wipe out the poverty.We have heard about the French Revolution,purely based on poverty.Kings Nobles and the people who suffered the poverty.
Post a Comment