ஜனாதிபதியின் யாழ்.விஜயம் ரத்து
யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இத்தகவலை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் விஜயமாக 14ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி, மழை காரணமாக தனது விஜயத்தை ரத்து செய்துள்ளார் என்று மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment