புலிகளின் வெடிபொருள் பலாலியில் வெடித்தது- இராணுவ வீரர் காயம்
யாழ்.பலாலி இராணுவ முகாமில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட வெடிபொருள் ஒன்று வெடித்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்று காலை சுமார் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவவருகின்றது. இதில் ஏ.பி. (அன்டி பேர்சனல்) ரக நிலக்கண்ணி வெடியொன்றே வெடித்துள்ளதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது..
இசசம்பவத்தில் லலித் தாமர (வயது 27) என்ற இராணுவ வீரரே காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வெடிப்பு சம்பவம் கண்ணிவெடியகற்றுகையிலேயே இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment