களஞ்சியத்தில் வெள்ள நிவாரணப் பொருட்களை வைத்துவிட்டு உறக்கத்தில் இருந்த அதிகாரிகள்- அழுகிய நிலையில் பொருட்கள் மீட்பு
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் மன்னார் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி குனசீலன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதீக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவினுடாக வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்களான அரிசி, மா, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், நெத்தலிக்கருவாடு போன்றவை மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரியினால் மன்னார் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொருட்கள் வைக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் எந்த அதிகாரிகளும் பொருட்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் மூடியிருந்த குறித்த களஞ்சிய சாலையில் இருந்து சில நாட்கலாக துர்நாற்றம் வீசி வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அதிகாரி தலைமையிலான குழுவினர் அவற்றை அவ்விடத்தில் இருந்த அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த களஞ்சியசாலை தற்போது சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதினால் அதற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது
.
2 comments :
The storekeeper of the stores is purely responsible for the damages
of the groceries.The head of this stores and the storekeeper are answerable.
Before you give a responsible appointment think twice or thrice,whether he or she is suitable for the appointment,making back door appointments and blaming each other
and later on giving wide publicities about the damages or loses are nonsence.
Post a Comment