Monday, January 21, 2013

வவரிங்காவை தோற்கடித்த டியோகோவிக்!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் தொடரின், ஆடவர் சுற்றுக்காக நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில், சேர்பியாவின் நோவாக் டியோகோவிக் ஐந்து மணிநேரம் போராடி சுவிற்சர்லாந்து வீரர் வவரிங்காவை தோற்கடித்துள்ளார்.மொத்தமாக 5 மணித்தியாலங்களும், 2 நிமிடங்களும் இப்போட்டி முடிவடைய எடுத்துக்கொண்டன. 1-6, 7-5, 6-4, 6-7 (5), 12-10 என்ற செட் கணக்கில் இருவரும் கடுமையாக மோதினர்.

நான் வெற்றி பெற்ற போதும், நிச்சயமாக வெற்றி பெறுவதற்குரிய சம தகுதி வவரிங்காவிடம் இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார் டியோகோவிக். வவரிங்கா கடுமையாக போராடி தோல்வியை தழுவியதால் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com