Tuesday, January 8, 2013

இராணுவத்தினருடன் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கிளி மாணவர்கள்.

வன்னி விடுவிக்கப்பட்டு ஏ9 பாதை திறந்து விடப்பட்டதிலிருந்து இதுவரை 26 வீதி விபத்து மரணங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவ்விபத்துக்களில் பாதசாரிகளான மாணவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களே அதிகம் மரணத்தை தழுவியியுள்ளனர்.

விதிப்போக்குவரத்து தொடர்பான போதிய அறிவு இன்மையால் இவ்விபத்துக்கள் இடம்பெறுகின்றமை கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து விதிகள் தொடர்பில் போதிய அறிவூட்டல்களை செய்யும் கருத்தரங்குள் வீதிப்போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொண்டதுடன் , வாகன சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை கிளிநொச்சி பிரதேச மாணவர்கள் இராணுவ பொலிஸாருடன் இணைந்து பகிர்வதை படங்களில் காணலாம்.










No comments:

Post a Comment