Friday, January 18, 2013

என்னுடைய செல்லப் பிள்ளையைக் கொலை செய்த சவூதியின் உதவி வேண்டாம் -ரிசானாவின் தாயார்

என்னுடைய சின்ன மகளை இரக்கமில்லாமல் கொலை செய்த சவூதி அரசாங்கத்தினதோ, அல்லது சவூதி மக்களுடையதோ உதவி எனக்கோ சரி என்னுடைய குடும்பத்திற்கோ தேவையில்லையென்று சவூதி அரேபியாவில் கழுத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட கைப் பணிப்பெண் ரிசானாவின் தாய் அஹமது செய்யது பரீனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்; அவர் தெரிவிக்கையில்,

எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் உதவி செய்ய பலர் சவூதியில் தயராக உள்ளனர் என்று அறிந்து கொண்டேன்.

சவூதியைச் சேர்ந்த எவரின் உதவியும் எனக்கு வேண்டாம் இவ்வாறு யாரும் அன்பளிப்புகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமைச்சர் ஹில்புல்லா சவூதி தனவந்தர் ஒருவர் ரிசானாவின் குடும்பத்திற்கு உதவி செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

4 comments :

Anonymous ,  January 18, 2013 at 12:04 PM  

She is really great,every mother has the motherly pain.Wealth condolences sympathies are nothing to a beloved parents and for the own brothers and sisters.What the mother's decision we believe a great respect of a grieving mother gives to her beloved daughter

சரண்யா ,  January 18, 2013 at 12:35 PM  

அடி என்றால் அடி ஹிஸ்புல்லாவிற்கு செருப்படி. ஏழைகளுக்கும் தன்மானம் உள்ளது என்பதை உணர்த்திய இந்த தாய்கு இலங்கையிலுள்ள ஒருவ்வொருவரும் 1 ரூபா கொடுங்கோ. அது போதும்.

மதம் மதம் என மதம்பிடித்து அலையும் கூட்டம் சவுதியின் படுபாதக கொலையை பணம்கொடுத்து மறைக்க முற்பட்டதை மறக்க முடியாது. ஹிஸ்புல்லாவிற்கு நடுறோட்டில் வைத்து செருப்பால் அடிக்க வேண்டும்.

Guna ,  January 18, 2013 at 2:04 PM  

வரவேற்கத்தக்க விடயம். ஆனால் தனது பிள்ளையை சவுதிக்கு அனுப்ப முதல் இவ்வாறு தன்மானத்துடன் சிந்தித்திருந்தால் அச்சிறுமியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்.

ஆனால் கவனத்துடன் இருக்கவேண்டிய விடயம் என்னவென்றால், ரிசானாவின் பெயரை சொல்லி இவ்வாறான கோமாளி முட்டாள் அமைச்சர்கள் முட்டாள் சவுதி காரனிடம் காசை வாங்தி அவனுகளின் பொக்கற்றில் போட்டுக்கொள்ளுவானுகள். ஆகவே அது தொடர்பாக மிகவும் கவனத்துடன் செயற்பட்டாள் ரிசானாவின் பெயரால் வயிறு பிளைக்கும் முஸ்லிம் அமைச்சர்களை கட்டுப்படுத்தலாம்.

தன்மானம் கெட்ட முஸ்லிம் அமைச்சாருக்கு இன்னும் புரியவில்லையா தன்மானம் என்றால என்ன என்று?

Anonymous ,  January 18, 2013 at 4:25 PM  

Well done mother,you are an excellent mother.Afterall Money is just a peanut before the dearly love.It is a good lesson to the bootlickers of Saudi

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com