நவீன மயப்படுத்தப்படும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்!
ஜப்பான் ஜயிக்கா நிறுவனத்தின் 28,969 மில்லியன் யென் செலவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இரண்டு திட்டங்களாக நடைபெறவுள்ள இவ்வேலைத்திட்டங்கள் எதிர்வரும் 2015ம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment