பிரான்ஸ் தூதுவரின் கேள்வியால் வாய் அடைத்துப்போன யாழ் ஆயர்!
யாழ். மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் றொபின்சன் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம் இரு இனங்களையும் ஒன்று சேர்ப்பது தொடர்பாக ஏன் அக்கறை காட்டவில்லை என கேள்வியெழுப்பி எழுப்பினார்.
ஆயர் இல்லத்தில் இன்று (09.01.2013)சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இந்த கேள்வியை எழுப்பியதும் ஆயர் பதில் கூறமுடியாது வாய் அடைத்து போய் இருந்தார்.
தொடர்ந்து கிறிஸ்டீன் றொபின்சன் யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆராய்ந்தார்.
தொடர்ந்து யாழ் ஆயர் இந்திய மீனவர்களின் இழுவைப்படகின் அத்துமீறல் செயற்பாட்டினால் இலங்கை கடற்பரப்பில் உள்ள கடல் வளங்கள் சூரையாடப்பட்டு போகின்றது. இதற்கான ஒரு நல்ல தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து கிறிஸ்டீன் றொபின்சன் இன்று மாலை யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்தையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
1 comments :
Spirituality always beyond the level
of an ordinary human being.Lord Jesus
deeply care for each and everyone.He listen to our prayers attentively all the time without any discrimination.
Post a Comment