அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல். (படங்கள் வீடியோ )
2013 ஆண்டை வரவேற்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் கடந்த 15ம் திகதி இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜாலிய விக்ரமசூரியவின் தலைமையில் தைப்பொங்கல் விழா நடைபெற்றது.
சிவானந்த குருக்களின் விசேட பூசையுடன் ஆரம்பமான தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய திருமதி கனகா ரங்கநாதன் பல்வேறு சமூகங்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் ஒரு நாடாக இலங்கை காணப்படுவதாக வர்ணித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த கனகா ரங்கநாதன் எங்கும் இல்லாத வகையில் இயற்கையினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள ஒரே ஒரு நாடாக இலங்கைகாணப்படுவதுடன் பல்வேறு சமூகங்களும் தங்கள் கடவுள்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வணங்குவதற்கு ஏற்ற சிறப்பம்சம் கொண்ட ஒரு நாடாக இலங்கை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment