மக்களை திரட்டிக்கொண்டு வீதிக்கு இறங்குவேன்! மிரட்டுகின்றார் விக்கிரமபாகு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்து, அரசியலமைப்பை மீறினால், மக்களின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு, நாடு தழுவிய ரீதியில் மக்களை வீதியில் இறக்கி, அரசாங்கத்திற்கு எதிராக போராடப்போவதாக, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார். திவிநெகும சட்டமூலம் தொடர்பாக, 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அரசாங்கம் நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தியதாகவும், அரசயிலமைப்பு சீர்த்திருத்தத்தை இரத்து செய்வதற்கு, முயற்சிப்பது அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கு முன்னால், இனங்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்த, அரசாங்கம் முயற்சிப்பதாகவும், விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment