தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதச்சம்பளம்!
இலங்கையின் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், தொலைபேசி கொடுப்பனவுகள், வாகனங்கள் மற்றும் அதற்காக வழங்கப்படும் எரிபொருள் தொடர்பான தகவல்களை பாராளுமன்றத்தில் அரசாங்கம் நேற்று(09.01.2013) வெளியிட்டது. இதனடிப்படையில் அமைச்சரொருவருக்கு மாத சம்பளமாக 65 ஆயிரம் ரூபாவும் பிரதியமைச்சர் ஒருவருக்கு 63.500ரூபாயும் வழங்கப்படுவதோடு தொலைபேசி கொடுப்பனவாக மாதமொன்றுக்கு 50 ஆயிரம் ரூபாவும்,வாகனங்கள் மற்றும் அதற்கான எரிபொருட்களும் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்தது.
இதனைவிட அமைச்சர் ஒருவருக்கும், பிரதியமைச்சர் ஒருவருக்கும் சம்பளத்தை விட மேலதிகமாக இரண்டு அலுவலகத் தொலைபேசிக்கு 20 ஆயிரம் ரூபாவும் கடமையின் நிமித்தம் 2 வீட்டுத் தொலைபேசிக்கு 20 ஆயிரம் ரூபாவும் கையடக்க தொலைபேசிக்கு 10 ஆயிரம் ரூபாவென மொத்தமாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாது மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பெற்றோல் வாகனமொன்றுக்கு 600 லீற்றரும், டீசல் வாகனமொன்றுக்கு 500 லீற்றர் எரிபொருள் வழங்கப்படுவதுடன் மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பெற்றோல் வாகனமொன்றுக்கு 750 லீற்றரும், டீசல் வாகனமொன்றுக்கு 600 லீற்றர் எரிபொருளும் வழங்கப்படுவதாக அரசு இதன் போது தெரிவித்தது.
இதனடிப்படையில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு மாவட்ட அடிப்படையில் வித்தியாசப்படும் எரிபொருள் கொடுப்பனவுக்காக 2,000 ரூபாவும், கையடக்கத் தொலைபேசிக்கான கொடுப்பனவும், பாராளுமன்றம் வருவதற்காக 500 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படுவதாக அரசு நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.
1 comments :
Ha...Ha...Ha...Just only an MP and enjoy the life
Post a Comment