Thursday, January 17, 2013

மட்டக்களப்பில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு முயற்சிக்கு எதிராக தமிழர்கள் நாளை ஹர்த்தால்.

மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்குகின்ற இரு கிராமசேவகர் பிரிவுகளை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிர்வாக அலகினுள் இணைத்துக்கொள்வதற்கு முஸ்லிம்கள் தரப்பினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்ற முயற்சிக்கு எதிராக தமிழர் தரப்பு தமது எதிர்பினை காட்டும் பொருட்டு நாளை ஹர்த்தாலுடன் கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

குறித்த இரு கிராமசேவகர் பிரிவுகளிலும் பெரும்பண்மையாக தமிழ் மக்கள் வாழுகின்றபோதும் அவர்களை முஸ்லிம்களுக்கென அண்மையில் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட கோரளைப்பற்று மத்திய பிரதேத்தினுள் இணைத்துக்கொள்வனூடாக 45900 ஏக்கர் நிலப்பரப்பினை முஸ்லிம்கள் தமது நிர்வாக அலகினுள் கொண்டுவர முயற்சிப்பதாக தமிழர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுவதுடன் இம்முயற்சினை தடுத்து நிறுத்தும் பொருட்டு நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கோண்டு குறித்த இரு கிராம சேவகர் பிரிவுகளும் வழமைதொடர்சியாக கோரளைப்பற்று தெற்கு பிரதேச சபையுடனேயே இருக்கவேண்டும் என்ற தமது வேண்டுதலை மகஜராக அரச உயர் மட்டத்திற்கு வழங்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துகின்ற சகல அரசியல் கட்சிகளும் தம்மிடையேயுள்ள போட்டிகளை புறந்தள்ளிவைத்து விட்டு இணைந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரியவந்ததை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அவர்களை தொடர்பு கொண்டு கேட்டோம்.

முஸ்லிம்கள் மேற்கொள்ள முயல்கின்ற நில அபகரிப்பு முயற்சியின் எதிர்கால விளைவுகள் குறித்து தெளிவாக விளக்கிய அவர் நாளை இடம்பெற இருக்கின்ற ஹர்த்தால் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்க மாட்டாது எனவும் தான் இவ்விடயத்தினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்தினவின் நேரடிக்கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும், தனது முறையீட்டை ஏற்று வரும்வாரம் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற கட்டடத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளை அழைத்து அமைச்சர் பேசவுள்ளதாகவும் கூறினார்.

இப்பேச்சுவார்த்தையின் ஊடாக தமக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்ற நிலையில் தாம் ஆர்ப்பாட்டங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை எனக்குறிப்பிட்ட அவர் தீர்வு கிடையாவிடின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒட்டு மொத்த மக்களையும் திரட்டி இவ்விடயத்திற்கு எதிராக போராடும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment