இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பன மீளாய்வுக் கலந்துரையாடலில் குழப்பம் விளைவிக்க முயன்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடியாள் ஒருவர் அரச அதிகாரிகளாலும் பொது மக்களாலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளார்;. இச்சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு இணங்கவே இவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் கூட்டத்திற்கு ஒருவருக்கு பதிலாக இருவர் வந்திருந்ததோடு, பொது மக்களுடன் அமர்ந்திருந்துள்ளனர். இதனை அவதானித்த ஒருவர் உடனயாக பிரதேச செயலாளரால் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக அவர்கள் குழப்பம் விளைக்க முயன்றபோதும் பொதுமக்கள் தலையிட்டு ரிஎன்ஏ காரரை வெளியேற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment