வெலிகம ஆரம்பப் பாடசாலை அதிபர் இடமாற்றப்படுவார் – பா.உ. ஹேமால்
(கலைமகன் பைரூஸ்) வெலிகம அறபா ஆரம்பப் பாடசாலையின் புதிய அதிபர் அரசியல் செல்வாக்கினாலும், தனிப்பட்ட சிலரின் செல்வாக்கினாலும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைச் சமூகத்திலும், பெற்றோர்களிடத்தும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், கல்வியாளர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்களின் பெற்றோர்கள் அதிபரை மாற்றுமாறு கூறி அமைதிவழிப் போராட்டமொன்றை நேற்றுக் காலை 7.30 மணிக்கு வெலிகம அறபா ஆரம்பப் பாடசாலை முன்றலின் முன்பாக நடாத்தினர்.
‘தென் மாகாண சபை கல்வியமைச்சரே, தனியாரின் விருப்பிற்கிணங்க 2000 பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளாதே!
திறமையற்ற அதிபரே உடனே மாறு!
உங்களுக்காக அல்ல பாடசாலை எங்கள் பிள்ளைகளுக்காக.... அறபா தேசிய பாடசாலை அதிபரை மாற்றாதே, மாற்றாதே, ஜனாதிபதியே எங்கள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தாருங்கள்!’
போன்ற பல சுலோகங்களை ஏந்தி மக்கள் நிகழ்வில் அணிதிரண்டிருந்தனர்.
நிகழ்வை நேரில் கண்டு விடயங்களை அலசி ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹேமால் குணசேக்கரா இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
0 comments :
Post a Comment