யாழ்ப்பாண சர்வதேசக் கண்காட்சி இன்று ஆரம்பம்- படங்கள் இணைப்பு
2013ஆம் ஆண்டிற்கான யாழ்ப்பாணச் சர்வதேசக் கண்காட்சி இன்று யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுடன், இந்தியத் தூதரகம், யாழ்.வணிகர் மன்றம் உள்ளிட்ட அமைப்புக்கள் இணைந்து மேற்கொள்ளும் இக்கண்காட்சியில் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கலந்து கொண்டுள்ளன.
இக்கண்காட்சியானது பாடசாலை மாணவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும், பொது மக்களுக்கும் அதிக நன்மையை பெற்றுத் தரும் என யாழ்.வணிகர் மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்களான றிசாத் பதியூதீன், டக்ளஸ் தேவானந்தா, இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கம் இந்தோனேசியாத் தூதுவர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
.
1 comments :
மகிந்தரின் ஆட்சியில் நம்பட அமைச்சர் மாருக்கு நல்ல சாப்பாடு என்றது இவங்ட வண்டிகளை பார்க்க தெரியுதெல்ல.
கறாட்டி பிளக்பெல்ட் என்று சொல்லிக்கொண்டு திரிந்த டக்கிளசுக்கே இந்த வண்டியெண்டால் சாப்பாடு எப்படி என்று கொஞ்சம் யோசித்து பாருங்கோவன்.
Post a Comment