Thursday, January 24, 2013

தொடரை வென்றது இந்தியா!!

மொகாலியில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 4வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதுடன்3- 1 என்ற ரீதியில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 257 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை இழந்தது.தொடர்ந்து ஆடிய இந்தியா ரோகித் 83 ரன்கள் மற்றும் ரெய்னாவின் ஆட்டமிழப்பின்றி 89 ஓட்டங்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில் 47.3 ஓவர்களிலிலேயே இந்தியா 258 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது இதனால் 5 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3-1 என தொடரையும் வென்றது இந்தியா அணி.

முன்னர் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த இந்திய அணியின் இந்த வெற்றிகள் அதன் ரசிகர்களுக்கு ஆறுதல் தருமென கருதப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com