புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களுடன் கமலின் சுவரொட்டிகள் அதிர்ச்சியில் இந்திய றோ
கமல்ஹாசனுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கை கோர்திருப்பது போன்ற படங்கள் சுவரொட்டிகளில் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ளன. கமலின் விஸ்பரூபம் திரைப்படம் விரைவில் வெளியிடப்படவுள்ள நிலையில் திரைப்படத்திற்கான சுவரொட்டிகளிலேயே இப் படமும் சேர்க்கப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் நடிகர் கமல்ஹாசனை கலையுலக போராளி என வர்ணிக்கும் வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தமிழ் நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் இது விஸ்பரூபம் திரைப்படத்தை ஓடச் செய்யும் ஒரு முயற்சியெனத் றொ தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment