மீண்டும் கிழக்கில் பாம்புமழை!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியின் 6ஆம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதேச வாசி ஒருவர் நான் இன்று என்னுடைய வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மழையுடன் சேர்ந்து இரண்டு பாம்புகள் வந்து விழுந்ததாகவும் அதில் ஒரு பாம்பு தனது தோள் மீது விழுந்து ஓடியதாகவும் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறியதுடன் இப்பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகளென்பது பற்றி தங்களுக்கு தெரியாதெனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கடநத நவம்பர் மாதம் முதல் நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிவப்பு, பச்சை, மஞ்கள், கறுப்பு, நீலம், மண்ணிறம், முதலை,பாப்பு, போன்ற பல்வேறுவடிவங்களில் மழை பெய்ததுகொண்டிருக்கும் போது மீண்டும் ஒரு முறை மட்டக்களப்பில் பாம்புமழை பெய்துள்ளது.
0 comments :
Post a Comment