ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைக்காக வத்திக்கானில் அரைநிர்வாணப் போராட்டம்
பாப்பரசர் தேவ ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருக்கும்போது பீமன் பெண்கள் இயக்கத்தின் ஓரினச் சேர்க்கையாளர்களில் ஒருபகுதியினர் வத்திக்கானிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தின் முன்பாக அரைநிர்வாணத்துடன் போராட்டம் நடாத்தியுள்ளனர். பாரிஸ் நகரில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருணமத்திற்கு எதிராகப் பாத ஊர்வலம் நடாத்தியதனாலேயே இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
நான்கு பெண்கள் ‘நாங்கள் ஓரினச் சேர்க்கையையே நம்புகிறோம்’ என்று நிர்வாண உடம்பின் பிற்பகுதியில் எழுதி அவ்விடத்தில் நின்று பக்தியாளர்களின் கோபத்தை வரவழைத்தமையால், அவர்கள், பாப்பரசர் உபதேசம் செய்யும்போது, ‘அசிங்கமான ஓரினச் சேர்க்கையாளர்களே வாயை மூடுங்கள்!’ என்று ஒரு பெண் உரத்த குரலில் குரல் எழுப்ப, அங்கு கூடியிருந்தோர், பெண்களில் ஒருவரைப் பிடித்து நையப்புடைந்துள்ளனர்.
வத்திக்கான் பொலிஸாரினால் ஓரினச் சேர்க்கையை விரும்பிக் குரல் எழுப்பிய பெண்கள் அங்கிருந்து அனுப்பப்பட்டனர். உக்ரைனைச் சேர்ந்த இந்த ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள் குரல் எழுப்பக் காரணம், பிரான்ஸ் ஜனாதிபதி பிரென்கோஸிஸ் ஹோலண்டே. ஓரினத் திருமணம் மற்றும் பிள்ளைகளைத் தத்தெடுத்தல் போன்றவற்றை சட்ட ரீதியாக்குவதற்காக பிரேரணையொன்றைக் கொண்டுவந்தமைக்கு ஆயிரக் கணக்கான பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையாகும்.
சென்ற ஞாயிற்றுக் கிழமை வத்திக்கானைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கை பெண் தம்பதியினரால் பிள்ளைகளைத் தத்தெடுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், பீமன் எதிர்ப்பார்ப்பார்பாட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். தாயுடனும், தாய்க்கு ஒத்துழைப்பு நல்குபவளுடனும் தமது ஆண்பிள்ளைகள் இருப்பதனால் தனது ஆண்மகன் வழிதவற நேரிடும் என்று தனது அச்சத்தைத் தெரிவித்த தந்தையொருவரின் வேண்டுகோளை இத்தாலி நீதிமன்றம் நிராகரித்ததற்கும் வத்திக்கான் பேச்சாளர் லொஸர்வெடோ ரொமானோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஸ்கயர்ட் ஹார்ட் எனும் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தின் பணிப்பாளர் எட்ரியானே பெஸினா, ஆண் பெண் எனும் பால் வேறுபாட்டை, ஆண் பெண்கள் இருக்கின்ற குடும்பத்தில் குடும்ப ஒருமைப்பாடு வளர்கின்ற காலத்தில் பிள்ளைகளுக்குத் தெளிவுறுத்துவது சிறந்ததாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
(கலைமகன் பைரூஸ்)
1 comments :
They go back to the unwanted dark ages period,just equal to animals.
Post a Comment