Saturday, January 5, 2013

தினமும் தேநீர் குடியுங்கள்: இதய நோய் ஓடிப்போகும்!

தினமும் 3 கோப்பை தேநீர் குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.முக்கியமாக டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தற்போது பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ரக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்று கண்டறிந்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகையில் இது குறித்து அவர் கூறியுள்ளது:

தினமும் 3 கோப்பை டீ குடிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது. இது தவிர இதய நோய் முக்கியமாக மாரடைப்பு வரும் வாய்ப்பும், வலிப்பு நோய் பாதிப்புக்கான வாய்ப்பும் குறைகிறது.

தினமும் 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது.

ஏற்கெனவே பிரான்ஸில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் டீ குடித்து வந்த பெண்ணுக்கு 32 சதவீதம் வரை இதய நோய் வர வாய்ப்புகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் டீ குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

டீ குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார் கேரி ரக்ஸ்டன்.

இனி நண்பர் டீ குடிக்க அழைக்கும் போது மறுக்காமல், உடன் செல்வது உடல் நலத்துக்கும் நல்லது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com