Wednesday, January 2, 2013

யாழ்.நகருக்குள் இந்திய வியாபாரிகளுக்கு தடை- நடைபாதை கடைகளுக்கும் ஆப்பு- யாழ்.மாநகர சபை

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இந்திய வியாபாரிகள் தமது வியாபாரா நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தடை விதித்துள்ளார். அத்தோடு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளையும் முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக யாழ்.வணிகர் சங்கத்தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.


யாழ். வணிகர் கழகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.நகரில் மேற்கொள்ளப்படும் நடைபாதை மற்றும் இந்திய வியாபாரிகளினால் நகர் வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக வணிகர் கழகத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டன.


இந்த பிரச்சினைகள் பற்றி வணிகர் கழகம் யாழ். மேயர் மற்றும் மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தது.

இதனையடுத்து, யாழ். மாநகர சபையினால் இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயங்களில் கவனம் செலுத்துமாறு யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேராவிற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

2 comments :

பரணி ,  January 2, 2013 at 6:22 PM  

மேயர் அம்மா, நீங்கள் அதிரடி முடிவுகள் எடுப்பதில் அலாதியான ஆள் என்று எனக்கு தெரியும்.

ஆனால் இது கொஞ்சம் றி்ஸ்க்கான விடயம். நம்மட தோழர்ர கொலைவழக்கு இன்னும் இந்தியாவில நடந்து கொண்டு இருக்குதெல்லே..

Anonymous ,  January 2, 2013 at 7:18 PM  

Local pavement hawkers a gift to the
consumers.You can see the pavement hawkers around the country.Those who earn a little money have no other alternative but to go to the pavement hawker for cheap buying,they cannot imagine the big shopping complexes.as such concessions must given to the pavemnt hawkers.Dominant of foreign pavement hawkers is a serious issue to be discussed.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com