Sunday, January 13, 2013

தொடர்ந்து போராடுவோம்! அண்ணன் ஆணைக்காக காத்திருக்கின்றோம். நெடியவன்குழு.

புலிகளமைப்பு சொத்துக்களை பங்கிட்டுகொள்வதற்காக தம்மிடையே முட்டிமோதிக்கொள்கின்றது என நாம் தொடர்சியாக தெரிவித்து வந்தோம். அதன்பொருட்டு புலம்பெயர் நாடுகளில், இணையச்சமர், துரோகிபட்டம் சூட்டுதல் எனத் தொடர்ந்து பாரிசில் கொலை வரை சென்றதையும் நாம் ஆங்காங்கே சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம். அந்த வரிகையில் தற்போது புலிகளின் உடைந்து சிதறியிருக்கின்ற பிரிவுகளில் பலம்மிக்க குழுவாக காணப்படுகின்ற நெடியவன் குழு தாம் புலம்பெயர் தேசத்திலே புலிகளின் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் பிரபாகரன் வரும்போது அனைத்தையும் அப்படியே ஒப்படைப்போம் என்றும் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பில் புலிகள் நெடியவன் அணி செய்தி தொடர்பாளர் ஆதித்தன் மாஸ்டர் இது தொடர்பாக தெரிவித்தபோது, 'விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை கயவர்கள் கைப்பற்ற நினைக்கிறார்கள்' என்றும் 'தேசியத் தலைவர் பிரபாகரனின் உத்தரவு வராமல் சொத்துக்கள் யாருடைய கைகளுக்கும் செல்லாமல் இறுதிவரை போராடுவோம்' என்றும் கூறியுள்ளார்.

'விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை திட்டமிட்டே கவரும் வகையில் தாமும் விடுதலைப் புலிகள் என்று கூறிக்கொண்டு கயவர்கள் பெரு முயற்சிகள் செய்கிறார்கள். அவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாது. அதற்காக நாம் இறுதிவரை போராடுவோம். இவை தேசியத் தலைவர் பிரபாகரனின் பெயருக்காக சேர்ந்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள். அவருடைய அனுமதியின்றி யாருடைய கைகளுக்கும் சென்று விடாமல், எம் தலைவர் நெடியவன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் பாதுகாத்து வருகிறோம்.

தேசியத் தலைவர் வெளிப்படும்போது இந்த சொத்துக்களை வைத்து பெரும் படை திரட்டி, தமிழீழம் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது சொத்து பற்றி கூச்சல் போடுபவர்கள், தேசியத் தலைவரிடம் போய் முறையிட வேண்டியதுதானே. தேசியத் தலைவரின் உத்தரவு வந்தால், யாருக்கும் சொத்துக்களை மாற்றிக் கொடுக்க நாம் தயார். அதற்குமுன், இந்த சொத்துக்களை வைத்து முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கு உதவப் போகிறோம் என்ற போர்வையில் இவற்றை அபகரிக்க நினைக்கிறார்கள் கயவர்கள். முன்னாள் போராளிகளுக்கு உதவினால், படை திரட்ட முடியாது. தமிழீழம் வெல்ல முடியாது. தமிழீழம் கிடைத்தவுடன் முன்னாள் போராளிகள் கௌரவிக்கப்படுவார்கள். அவர்கள் அப்போது உயிருடன் இருந்தால், ஓய்வூதியம் வழங்கப்படும். உயிரிழந்திருந்தால் உரிய பட்டங்கள் வழங்கப்படும்' என்றார்.

'அவர் உத்தரவு வரட்டும்.. தாராளமாக சொத்துக்களை தருவோம்.' 'அவர் உத்தரவு வருமா' என்று நாம் கேட்கவில்லை, 'யார் அந்த 'சொத்துக்களை கவர முயலும்' கயவர்கள்? எந்த குரூப்? அதில் எந்த சப்-டிவிஷன்?'

ஆக மொத்தத்தில் புலிகளின் சொத்துக்கள் எங்களிடம் உள்ளது தலைவர் வந்தால் தருவோம் என்றும் தம்மிடம் சொத்துக்களை உள்ளதையாவது ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு தெரியும் தலைவரின் மசிரைக்கூட கண்டுபிடிக்க முடியாது என்பது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com