Thursday, January 10, 2013

றிசானாவில் மரண தண்டனையைக் கேள்வியுற்ற தாய் நெஞ்சில் அடித்து கத்தினார். வீட்டிலிருந்து...!

தனது மகளின் மரணத்தை தாயால் தாங்க முடியவில்லை கதறி கதறி நெஞ்சில் அடித்து அடித்து அழுதாள்.

மகளின் வருகைக்காக காத்திருந்த தாய்க்கு அதிர்ச்சியில் உறைந்து போனாள் . அவளோடு மூதூரும் சோகத்தில் உறைந்து போனது மூதூர் றிசானா நாபீக்கிற்கு நேற்று மதியம் சவுதிஅரேபியாவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கேள்வியுற்றதும் றிசானாவின் தாயார் செய்வதறியாது திகைத்து நின்றார்.நம்ப மறுத்தாள்.

தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.றிசானாவின் குடும்பம் மாத்திரமல்ல அவளது மரணம் தொடர்பான செய்தி கிடைக்கப்பெற்றதும் மூதூரே துயக்கடலில் மூழ்கிப் போனது.

இலங்கை வாழ் மக்கள் அனைவரும் துடித்துப் போயினர்.பாலூட்டி சீராட்டி வறுமையிலும் அன்போடு வளர்த்த தனது மகளின் மரணத்தை தாயால் தாங்க முடியவில்லை கதறி கதறி நெஞ்சில் அடித்து அடித்து அழுதாள்.

இரு சகோதரிகளும் ஒப்பாரி வைத்தனர். தந்தையால் விம்மினார். சோகம் நெஞ்சை உருக்கியது. தாயின் அழுகையைக் கண்ட பொது மக்களும் கண்ணீர் சிந்தி அழதனர்.

சிலர் தாயின் குமுறலைக் காண முடியாமல் றிசானாவின் வீட்டிலிருந்தே வெளியேறிச் சென்றனர். பள்ளிவாசல்களிலும் விசேட தூ ஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

றிசானா இன்று விடுதலை செய்யப்படுவார் நாளை விடுதலை செய்யப்படுவார் என்று மக்களை ஏமாற்றி தமது அரசியலை நடாத்திய அரசியல்வாதிகளுக்கு சாபமிட்டுக்கொண்டே அவர்களை தூற்றியபடி மக்கள் கலைந்து சென்றனர்.

8 comments :

Anonymous ,  January 10, 2013 at 7:06 AM  

Wipe out the poverty and not to permit anyone go out of the country as domestic servants.Provide them with jobs.Domestic jobs including cleaning the toilets in the foreign countries like Saudi.What a shame to our country.Sending sympathy messages to Rizan's family is nothing at all.More Rizanas to be saved

Anonymous ,  January 10, 2013 at 7:43 AM  

மனிதாபிமானம் எங்கே? ஏழைகள் மனிதர்கள் இல்லையா?
காட்டு மிராண்டித் தனமான சவூதி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். மன்னர் ஆட்சி ஒழிய வேண்டும். முஸ்லீம் மக்கள் எல்லோரும் ரிசானா நபீ சார்பாக, சவூதி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக புறப்படுங்கள் இன்றே.

Anonymous ,  January 10, 2013 at 8:19 AM  

மனித பண்பாடு, மனிதாபிமானம், மனச்சாட்சி அற்ற அரக்கர்கள் கூடுதலாக வாழும் இடம் சவூதி அரேபியா என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய், பணம், சொத்து இருந்தால் மட்டும் மனிதர்களாகி விட முடியாது.,
உண்மையான மனிதன் என்றால் அறிவு பூர்வமாக நாகரீகம் அடைய வேண்டும்.. மகள் ரிசானாவின் மரணம் அனைத்து முஸ்லிம் மக்களை மிகவும் சிந்திக்கத் தூண்டும் சம்பவமாக அமைந்துள்ளது.

Unknown January 10, 2013 at 8:34 AM  

நபிகளார் நடந்த மண்ணில் இதையும் விட ஒரு அக்கிரமத்தை காதுகளால் கேட்க அல்லாஹ் எம்மை வைத்து விட கூடாது. இஸ்லாத்தை 100 வீதம் அமுல் படுத்து கிறோம் என்று கூவல் விடும் சவூதி அரசுக்கும் அதற்காக வாக்களத்து வளங்கும் எமது அலீம்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும் நாளை மறுமையில் கிடைக்கும். ஏழைகளுக்கும் அநானாதைகளுக்கும் றிஸானா போன்ற அனாதறவற்ற மக்களுக்கும்தான். அவர்களின் ஆதிக்கம் இஸ்லாம் என்ற பெயரை வைத்து செய்கிறார்கள். அந்த இஸ்லாத்தின் மனதாபனம் மன்னிப்பு விட்டு கொடுப்பு இரக்கம் காட்டல் இதெல்லாம் இவர்களின் மனங்களில் 4 வருடங்களாக தெரிய வில்லையா மனசை மாற்ற வில்லையா? அரக்க மனம் கொண்ட மனிதர்கள்.நாட்டிலே ஊருக்கு 10 பள்ளிவாயல்களும் மதரசாவும் காட்டி சவுதியின் பணனத்தில் கூத்தடிக்கும் இவர்களெல்லாம் என்ன செய்தர் இவர்களால் என்ன செய்ய முடியும். தனது முகத்தில் துப்பியவர்களையும் தன்னை கொலை செய்தவர்களையும் மன்னித்ததுதான் இஸ்லாம் இந்த மனிதாபவனங்களை விட்டு விட்டு பித்அத் என்ற தலை தெரிய கத்தும் நீங்கள் எதை சாதிக்க முடியும். பிள்ளையை கொடுத்து விட்டு கதறி அழும் தாய்க்கு உங்களால் ஆறுதல் சொல்ல முடியுமா? சகோதரி றிசானாவுக்காக எல்லாரும் துஆ செய்யுங்கள் அல்லாஹ் அவளுக்கு சுவர்கத்தை கொடுப்பான்.

Anonymous ,  January 10, 2013 at 9:02 AM  

It's very clear we must be very very careful about the bloodthirsty ghosts .For a little amount of money would you like to sacrifice your precious life to the canibals.Why not you wake up from the
illusion.Your life is worth for you and to your family mebers and not to the others.Money is nothing in comparision with your precious life.

Anonymous ,  January 10, 2013 at 11:56 AM  

It is surprising the people belong to the very dark ages still exists.What happened to the poor girl Rizana was a dark old ages incident.The international community should take a strong action to wipe out the dark old age rulers whereever they are.It is a question why they keep the Int criminal Court
in Hague

Anonymous ,  January 10, 2013 at 7:29 PM  

இவ்வளவு நடந்தும் ஒருவன் கூட காட்டு மிராண்டி சவூதி அராபியா அரசுக்கு எதிராகவோ அல்லது எம் மக்களை மதிக்காத சுயநல பொறுக்கி இலங்கை அரசுக்கு எதிராகவோ பலமான எதிர்ப்புக்களை காட்டவில்லை.
வேறு நாடுகளில் முஸ்லிம்கள் கொல்லபடும் போது போராட்டம், ஆர்பாட்டம், ஊர்வலம் செய்யும் எமது தலைவர்கள், உலாமாக்கள் ஏன் மௌனமாகி விட்டார்கள்? அநியாயங்களை, அநீதிகளை கொண்ட காட்டு வாசிகளின் சட்டங்களை கொண்ட சவுதியை தட்டிகேட்க ஏன் எதிர்க்கத் தயங்குகிறார்கள்?
ஏன் இந்தப் போலிவேடங்கள்?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com