Saturday, January 12, 2013

சவூதி அரேபியாவில் பெண்தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை- பான் கீ மூன்

சவுதி அரேபியாவில் தற்போது பெண்கள் நீதிமன்றங்களை அணுகுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுடன் வெளிநாட்டில் இருந்து வரும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலை அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளதுடன் இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் சவூதியரேபியாவில் வேலைசெய்த வீட்டின் 4 வயது குழந்தையை கொன்றதாக குற்றம் சுமத்தி தடுத்து வைத்துவைக்கப்பட்டு பின் தற்போது கழுத்து வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு கடும் கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளதுடன் சவுதி அரேபியாவில் மரண தண்டனை பயன்பாடு தற்போது அதிகரித்துச் செல்வதாக தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து ஆண்களதும் பெண்களினதும் குடியேற்றம், தேசியநிலை என்பன கருத்திற் கொள்ளப்பட்டு சர்வதேச சட்டத்தின் கீழ் நியாயமாக நடாத்தப்பட வேண்டும் என பான் கீ மூன் கூறியுள்ளார்.

3 comments:

  1. Hon UN Secretary,why not you take the culprits to the International Criminal court.At same time instruct every country to take out their citzens those who employed in Saudi countries as domestic servants or in any other catergories,because their lives are in grave danger in the hands of blood thristy masters.

    ReplyDelete
  2. உண்மையில் ஷரியா சட்டம் என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான கற்கால சட்டம். ஷரியா சட்டம் என்பது மனிதர் அறிவுரீதியாக நாகரீகம் அடைவதிற்கு முன்னர் மனிதநேயம் அற்ற காட்டு மிராண்டி அரக்கர்களினால் பின்பற்றி வந்த கொடுரச்சட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இவ் நாகரிக, நவீன உலகில், இன்றும் அச் ஷரியா சட்டம் ஒரு சில அரபு நாடுகளில் பின்பற்றப்படுகிறது என்றால், அந்நாடுகளும், ஆட்சியாளர்களும், அந்நாட்டு மக்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை எவரும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

    இவ்வுலகில், கற்கால காட்டு மிராண்டி ஷரியா சட்டம் சரியா? உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  3. Why not the Int community trying to wipe out the barberic Sheria law from the hands of the senseless beastly monsters.

    ReplyDelete