குளத்தில் மீன்பிடித்த சிறுவன் சடலமாக மீட்பு
குளத்தில் மீன்பிடித்து விளையாடிய 14 வயது சிறுவன்; குளத்தில் இருந்து சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கந்தரோடை இக்கிராயன் குளத்தில் இடம்பெற்றுள்ளது.நேற்று திங்கட்கிழமை காலை சுமார் 10 மணியளவில் வீட்டிலிருந்து மேற்படி குளத்தில் மீன்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துச் சென்றுள்ளார். இவரைத் உறவினர்கள் தேடிய போதும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் ; முறைப்பாடென்றும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த குளத்தில் சிறுவனது உயிரிழந்த சடலம் நீரில் மிதந்து கொண்டிருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
0 comments :
Post a Comment