தமிழ் பகுதிகளை அபகரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக மட்டக்களப்பில் இன்று ஹர்த்தால்
தமிழ்ப் பிரதேசங்களை முஸ்லீம் பிரதேசங்களுடன் இணைந்து நிலத்தை அபகரிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் தமிழர் பகுதிகளில் இன்று ஒரு நாள் ஹர்த்தால் அனு;ஷ்டிக்கப்பட்டுக் கொண்டுள்ளனர் மட்டக்களப்பு பிரதேச மக்கள். தமிழர்களின் எல்லை கிராமங்களான வாகனேரி, புணானை மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள கிராமங்கள் சிலவற்றை ஒட்டமாவடி,கோறளைப் பற்று மத்தி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுடன் இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரிலுள்ள பொதுச் சந்தை, வர்த்தக நிலையங்கள், ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச்சந்தை என்பனவும் மூடப்பட்டுள்ளன.
அத்தோடு ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சில அரச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. எனினும் வங்கிகள், பாடசாலைகள், தபால் நிலையம், போன்ற அரச ஸ்தாபனங்கள் திறக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை நகரின் முக்கிய இடங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment