பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க அரசியலுக்கு வரவேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தது. இச்செய்திகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள பொன்சேகா அவர்கள் பிரதம நீதியரசர் நியாயமற்ற முறையில் பதவியிலியிருந்து தூக்கியெறியப்பட்டால் மாத்திரமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் எனத் தெரிவித்திருந்தாகவும் ஊடகங்கள் தனது அழைப்பினை திரிவுபடுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பதவியில் தொடர்ந்தால் தானும் தனது கட்சியும் அவருக்கு பூரண ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதம நீதியரசர் பதவியை துறந்து அரசியலுக்கு வர விரும்பினால் தாங்கள் அவரை மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் கூறியுள்ள பொன்சேகா பிரதம நீதியரசர் பதவிலிருந்து தூக்கி எறியப்பட்டால் அவருக்கு அரசியலில் நுழைவதை விட மாற்று தெரிவுகள் ஏதம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment