‘டிரானின் பணத்தில் காய்நகர்த்துகிறார் அநுர திசாநாயக்க’ என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்
மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திசாநயக்க, இப்போது டிரான் அலஸ்ஸின் பணத்தினால் காலம் கடத்துகிறார் என்று ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருக்கிறார். குற்றவியல் பிரேரணைக்கு எதிராக பாத ஊர்வலத்தை ஒழுங்குசெய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையின்போதே அவர் அநுர திசாநாயக்கவின் முன்னிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சித் தலைவர், ஐ.தே.கவின் முக்கிய உறுப்பினர்கள்,ஜே.வி.பியிலிருந்து அநுர திசாநாயக்க, விஜித ஹேரத், தமிழ்த் தேசிய கூட்டணி, விக்கிரமபாகு, ஸ்ரீதுங்க உட்பட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். எதிர்ப்பணியில் ஐ.தே.கவின் தலைவர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று பேச்சுவார்த்தையின் போது ஜேவிபியினரிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர்ப்பார்பாட்டத்திற்காக பெருங்கூட்டத்தைக் கொண்டுவருவது பற்றி அலசும்போது விஜித ஹேரத், தமது கட்சியினரால் பெருந்திரளான மக்களைத் திரட்ட முடியாது என்றார். தனது வாகன ஓட்டுநருடன் சேர்த்து இன்னொருவரை அழைத்து வரமுடியும் என்றிருக்கிறார் விக்கிரமபாகு.
எதிர்கட்சித் தலைவர் ரணில் இந்தப் பேச்சை மறுபக்கம் புரட்டி, பெருந்திரளான மக்களை வரவழைப்பது ஐ.தே.க. என்றால் தமது கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ள முடியும் என்றிருக்கிறார். அதுபற்றி அநுர திசாநாயக்க தொடர்ந்து எதிர்ப்பைக் காட்டிவரும்போது, சட்டென்று ‘அநுர இப்போது நீங்கள் டிரானின் பணத்தில்தானே ஓடுகிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைக் கேட்ட அநுர திசாநாயக்க நிலத்தைப் பார்க்க, விஜித ஹேரத் வாய்விட்டுச் சிரித்திருக்கிறார். எது எவ்வாறாயினும், திஸ்ஸ அத்தநாயக்க, ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தில் கலந்துகொள்ளாதுவிடின் தானும் கலந்துகொள்ளமாட்டேன் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment