Sunday, January 13, 2013

பிரதம நீதியசரை பதவி விலக்கும் அறிக்கையில் ஜனாதிபதி மகிந்த கையெழுத்திட்டார்- பதவி நீக்கம் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள குற்றப்பிரேரணை அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்;. நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட அறிக்கை தொடர்பாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்த நிலையிலேயே இவ்வறிவித்தல் வெளியிட்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இக் கடிதம் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலான ஜனாதிபதியின் கடிதம் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது என அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

1 comments :

Anonymous ,  January 13, 2013 at 9:40 PM  

She is to be respected and honoured,as she was our Chief Justice.Her pension and the concessions is to be consiered positively.It would be good for our country,good for the society and good for the future generation.Taking revenge cannot suit the Buddha Dharma

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com