Thursday, January 3, 2013

சென்னை ஓபன் டென்னிஸ்: டிப்சரோவிச்- மகேஷ்பூபதி ஜோடி முன்னேற்றம்

சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நிலை வீரர் ஜான்கோ டிப்சரோவிச் (செர்பியா) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சை சேர்ந்த ரோஜர் ஹசிலினை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.டிப்சரோவிச் கால் இறுதியில் ஜப்பான் வீரர் கோ சொய்டாவை எதிர்கொள்கிறார். இவரிடம் பிரகாஷ் அமிர்தராஜ் 2-வது சுற்றில் தோற்றார்.

நான்காம் நிலை வீரரான வாவெர்னிகா (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் மார்ஷல்ஸ்டேபை தோற்கடித்தார்.6-ம் நிலை வீரரான ராபின் ஹாஸ் (நெதர்லாந்து) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். சுலோவாக்கியாவை சேர்ந்த பெதனி 7-5, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஹாசை வீழ்த்தினார். வாவெர்னிகா, பெதனி கால்இறுதில் மோதுகிறார்கள்.

இரட்டையர் பிரிவில் முதல் நிலை ஜோடியான மகேஷ்பூபதி (இந்தியா)- டேனியல் நெஸ்டர் (கனடா) ஜோடி கால்இறுதிக்கு முன்னேறியது.இந்த ஜோடி 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் ஸ்ரீராம் பாலாஜி- ஜீவன் நெடுஞ்செழியன் (இந்தியா) ஜோடியை வீழத்தியது. மகேஷ் ஜோடி கால்இறுதி யில் கிளாசன் (தென் ஆப்பிரிக்கா)- நிக்கோலஸ் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.

இதேபோல ரோகன் போபண்ணா (இந்தியா)- ராஜீவ் ராம் (அமெரிக்கா)- ஜோடியும் கால் இறுதிக்கு முன்னேறியது. இந்த ஜோடி 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் சொய்டா (ஜப்பான்)- ஹசூன் லு (சீனதைபே) ஜோடியை வென்றது.

மேலும் சோம்தேவ் தேவ்வர்மன் (இந்தியா)- ஜெர்ஜிவ் (உக்ரைன்) ஜோடியும் கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

No comments:

Post a Comment