ஜ.நா வில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்- அரசாங்கம் பகிரங்க அறிவிப்பு
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கொண்டுவரவிருக்கின்ற பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உயர் மட்ட இராஜதந்திரிகள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையிலேயே அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஜனாதிபதி செயலகத்துடன் மிக அண்மித்தே செயற்படுகின்றோம். ஜனாதிபதி செயலகமும் இதனை கண்காணித்துகொண்டு வருகின்றது.
இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து சர்வதேசத்திற்கு போதியளவு விளக்கமளித்துள்ளோம்.
மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற விவகாரம் எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தாது அதனை தயாராகவும் நம்பிக்கையுடனும எதிர்கொள்வோம் என்றார்.
0 comments :
Post a Comment