Friday, January 11, 2013

ரிசானா ஏன் சவூதி போனாரோ அது நிறைவேறும்-அமல்சேனா லங்காதிகார

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் வீடு புனர்நிர்மாணம் செய்துகொடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தலைவர் அமல்சேனா லங்காதிகார தெரிவித்திருந்த நிலையில் இவர்கள் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி அரேபியா தனவந்தரொருவர் முன்வந்துள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

நேற்று (11.01.2013) வியாழக்கிழமை அவர் இதனை தெரிவித்ததுடன் 'ரிசானா நபீக்கின் குடும்ப வறுமையை கருத்திற் கொண்டு எந்தநோக்கத்திற்காக அவர் சவூதி அரேபியாவுக்கு சென்றாரோ அது நிறைவேற்றப்பட வேண்டுவது மட்டுமல்லாது ரிசானாவின் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவிகளை வழங்கப்படும் என குறிப்பிட்டார்.

"இது தொடர்பில் சவூதி அரேபியாவை சேர்ந்த தனவந்தர் ஒருவருடன் கலந்துரையாடியபோது நான்கு மாத காலத்திற்குள் ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாக" பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இவர்கள் மட்டுமல்லாது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரும் றிஸானா நபீக்கின் வீட்டுக்கு சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் வழங்கினார்

No comments:

Post a Comment