இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீக்க கோரி வைக்கோ தாக்கல் செய்த ரீட் மனு இன்று விசாரணைக்கு ஏற்பு
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வைகோவின் ரீட் மனு பிரதம நீதியரசர் எலிப்பி தர்மாராவ், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழக்கு சார்பாக வைகோ ஆஜராகி வாதாடினார். இதன்போது.
புலிகள் மீதான தடையை உறுதி செய்து, தீர்ப்பாயம் 2012 நவம்பர் 27ஆம் திகதி பிறப்பித்த ஆணை நீதிக்கு எதிரானதும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும் உண்மைக்கு மாறான வாதங்களின் அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் இந்திய மத்திய அரசு, விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டையும் தமிழ் ஈழத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக எள்ளவும் உண்மை இல்லாத, முழுக்க முழுக்க அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி இந்தத் தடையை நீடித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் மீதான தடையை எதிர்த்து, நான் தாக்கல் செய்த ரீட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தங்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்று அதன் மீதான தீர்ப்பையும் எதிர்பார்த்து இருக்கிறோம்' என்றார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதம நீதியரசர் எலிப்பி தர்மாராவ், 'வைகோவின் ரீட் மனுவை அனுமதித்ததோடு, நான்கு வார காலத்திற்குள் இந்திய அரசு தரப்பு பதில் தாக்கல் செய்யப்பட வேண்டும்' எனறும் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment