அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அராங்கத்திடம் அமெரிக்க தூதரம் கோரிக்கை
அடிப்படை உரிமையைப் பாதுகாத்து அனைத்து பிரஜைகளும் பழிவாங்குதலுக்கு உட்படும் அச்சமேதுமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை நாம் கோருகின்றோமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அரசாங்கத்தை கோரியுள்ளது.அண்மைக்காலமாக இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அண்மை காலமாக இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்திய சிவில் சமூக நிறுவனங்கள், ஆர்வலர்கள் மற்றும் சட்டத்திற்காக குரல்கொடுப்போருக்கு எதிராக தொடர்ந்தும் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக நாம் கரிசனை கொண்டுள்ளோம்.
கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையானது பிரபஞ்சத்திற்கு உரித்துடையதென்பதுடன் அது இலங்கை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாத்து அனைத்து பிரஜைகளும் பழிவாங்குதலுக்கு உட்படும் அச்சமேதுமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை நாம் கோருகின்றோம் என்றுள்ளது..
0 comments :
Post a Comment