மக்களை பதம்பார்க்கும் மின்கழிவுகள் நீங்களே பாருங்கள்
சுற்றுச் சூழலுக்கு பிளாஸ்ரிக் பொருட்கள் தீங்கானவை பிளாஸ்ரிக் பைகள் மற்றும் பொருட்களின் பாவனையைத் தவிர்க்கச் சொல்லி பல நாடுகளில் அதை நடைமுறைப்படுத் தவும் முடிகிறது. ஆனால் உலகம் இப்போது e-waste என்று சொல்லப்படுகிற மின்கழிவுகளால் கலங்கிப் போயிருக்கிறது. பிளாஸ்ரிக்கைப் போல இவை மனிதர் இன்று தவிர்க்கக் கூடியன அல்ல.
மின்கழிவுகள் என்றால் என்ன? பயனற்ற மின்சாதனப் (Electrical) பொருட்களும், மின்னணுப் (Electronic) பொருட்களும் மின்கழிவுகள் எனப்படுகின்றன. அதாவது செல்போன், கடிகாரம், அவற்றின் மின்கலம் ; (battery), கணனி, கணனி சார்ந்த துணை உபகரணங்கள், செப்பு வயர்கள், மின்சுற்று (Electric Circuit), எல்சி.டி. திரை, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, சலவை எந்திரம், பாதரச விளக்குகள் மற்றும் எல்லா மின்சார்ந்த பொருட்களும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
இந்தப் பொருட்களெல்லாம் ஈயம், காட்மியம், பெர்லியம், தாமிரம், வெள்ளீயம், சிலிக்கன் இரும்பு, அலுமினியம், பாதரசம் போன்றவற்றாலும் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களும் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இதனைச் சாதாரண குப்பையில் போடும்போது சுகாதாரமற்ற முறையில் இந்தப் பொருட்கள் தெரிந்தோ, தெரியாமலோ எரித்துப் பிரிக்கப்படுகின்றன. இந்த விஷக்கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன.
தூக்கி எறியப்பட்ட மின்கலங்கள் (அதாவது சாதாரண பற்றரிகள்) ஒரு உயிர்க்கொல்லி என்று பலரும் அறிந்ததில்லை. இந்த மின்கலத்திலுள்ள பொட்டாசியம் ஐதரொக்ஸைட் எளிதில் நீருடன் சேர்ந்து மின்கலனை அரித்து, உள்ளிருக்கும் பாதரசத்தை மண்ணோடு கலந்துவிடுகிறது. பாதரசம் மூளை நரம்புகளைப் பாதிக்கும் இரசாயனப் பொருளாகும், இது எளிதில் காற்றிலும் நீரிலும் கலந்து மனித உடலுக்குள் சென்று, மனப் பிறழ்ச்சி, கோமா, தற்கொலையுணர்வு என பலவித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
உலகத்தின் புத்தம்புது அதிசயம், உலகம் இனி உங்கள் கையில் எனக் கூவி கூவி விற்கப்பட்ட அனைத்து அதிநவீன பொருட்களும் சில வருடங்களில் மின்-கழிவுகளாக மாறி, நமக்கு எதிராகத் திரும்பப் போகின்றன – திரும்புகின்றன. இன்று தூக்கி எறியப்படும் மின்கழிவுகள் எல்லாம் நாளை நம் உயிருக்கு எமனாக மாறக்கூடியவைகளே.
பிளாஸ்ரிக் போல கண்ட இடங்களில் இவற்றைத் தூக்கி யெறிவது பேராபத்தை விளைவிக்கும் என்பதை நாம் உணர் ந்துகொள்ள வேண்டும்; எல்லோருக்கும் உணர்த்தவும் வேண் டும். இந்த மின்கழிவுகள் ஒழுங்காக ஓரிடத்தில் சேர்க்கப்பட்டு, அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட ஏற்பாடு வேண்டும்.
நீர்நிலைகள், விவசாயம் செய்யும் பகுதிகள், இயற்கை வனங்கள் போன்ற பகுதிகளில் கட்டாயம் இவற்றை வீசக் கூடாது. இதற்கென முறையான மின்கழிவு மேலாண்மை செய் யக்கூடிய நிறுவனங்கள் உருவாக வேண்டும். அவை இவற் றைச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். முறையான மின்கழிவு மறுசுழற்சி ஆலைகளை அமைக்கவும் அரசை கோரவேண்டும்.
நாமும் எலக்ட்ரோனிக் பொருட்களின் மீதான பேராவலைத் தணிப்பதுடன், முறையான மறுசுழற்சி செய்து மாசு குறைக்கும் நிறுவனப் பொருட்களை வாங்கி விற்பதற்கு நம் வர்த்தகர்களை வலியுறுத்த வேண்டும். இவை அனைத்தை யும்விட மிக முக்கியமாக, மக்களிடையே இவற்றின் ஆபத்து குறித்த விழிப்புணர்வைக் கொண்டு வரவேண்டும். நாம் இந்த மின்கழிவுகளை அலட்சியமாக குப்பைகளில் எறிந்தும் எரித்தும் வருகிறோம். இதிலுள்ள ஆபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
0 comments :
Post a Comment