Sunday, January 20, 2013

மார்ச் மாதம் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஐ.நாவில் தீர்வு சம்பந்தன் நம்பிக்கை -தீர்க்கமான முடிவு எடுக்கவுள்ளராம்.

இதுவரையில் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் தக்க பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். இதனால் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாம் ஒரு தீர்க்கமான முடிவினை அரசியலில் எடுக்கவுள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் உரையாற்றுகையில்,

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இந்தியாவின் அழுத்தத்துடன் அங்கத்துவம் வகிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை

எமது போராட்டம் நின்றுவிடவில்லை. தற்போது எமது போராட்டத்தின் தன்மை விஸ்திரமடைந்துள்ளது. அது எமது மறைந்த தலைவர்களது தந்தை செல்வா, இராசமாணிக்கம், போன்றோர் கூறியது போன்று கலவரமின்றி வேறொரு வியூகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளோம்.

இதனை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கின்றது. எதிர்வருகின்ற மார்ச மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கை பதில் சொல்லியே ஆக வேண்டும்.இந்த பதிலை வைத்துக்கொண்டு ஐக்கிய நாடுகளிடமிருந்து தமிழர்களுக்கு மிகவும் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம்.

ஐக்கிய நாடுகளில் எடுக்கபட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை அரசாங்கம் இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இராணுவத்தை வெளியேற்றப்பட வேண்டும்.

அத்துடன் அரசியல் கைத்திகள் விடுவிக்கப்பட வேண்டும், பறிபோன தமிழர்களின் நிலங்கள் மீளக் கையளிக்பட்டல் வேண்டும்.

ஆனால் இதுவரையில் இவை நடந்ததாக தெரியவில்லை. இவை அனைத்திற்கும் எதிர்வரும் மார்ச் மாதம் தக்க பதில் கிடைக்கும் என நம்புகின்றோம்.



1 comment:

  1. Our next attraction" Promises for the year of 2013"

    ReplyDelete