Saturday, January 26, 2013

மிதிவெடியகற்றப்படாத நாகர்கோயில் பகுதிக்குள் இரும்பு பொறுக்கச் சென்றர் மிதிவெடியில் சிக்கி பலி- மீட்கப்படாத நிலையில் சடலம்

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் இரும்பு பொறுக்குவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர் மிதிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத குறித்த பகுதியில் உள்ள இளைஞனின் சடலத்தை மீட்க முடியாதுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதிக்குள் மூவர் இரும்பு பொறுக்கச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் மிதிவெடியில் சிக்கியுள்ளார்.

செல்வம் தவசீலன் (வயது 24) என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் அவரின் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com