குற்றவாளியாகிவிட்டார் பிரதம நீதியரசர்!
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் 117 பேரின் கையொப்பத்துடன் சென்ற வருடம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரேரணை, இன்று (11) நடைபெற்ற விவாதத்தின் பின்னர் 106 மேலதிக வாக்குகளினால் (2/3) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் வாக்களிப்பதிலிருந்தும் தவிர்ந்து கொண்டுள்ளனர்.வாக்களிப்புக்கு முன்னர் அடிக்கடி சபையில் வாக்குவாதங்கள் எழுந்ததால் சபை நடவடிக்கைகள் பிற்போடப்பட்டன.
14 குற்றங்களுடன் கூடிய குற்றவியல் பிரேரணையை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டியினரால் விசாரிக்கப்பட்டவற்றில் ஐந்து குற்றங்களில் 3 இல் அவர் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது.
குற்றப் பிரேரணையின் இறுதி முடிவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு, அவர் கையொப்பம் இட்டதும் பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment