'புதிய பிரதம நீதியரசரை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்கிறது சட்டத்தரணிகள் கூட்டிணைப்பு
அரசாங்கம் நியமிக்கவுள்ள புதிய பிரதம நீதியரசர் யாராக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், அவ்வாறான நியமனத்திற்கு எதிராக சட்டரீதியாக தாம் செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன கொழும்பில் ஊடகவியலாளர்ளுடன் உரையாடும்போது குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட முடியாதென்றும், ஜனாதிபதியினால் நியமிக்கப்படுபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக செயற்பட முடியும் என்றும் அவர் அங்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா, ஜே. சீ. வெலிஅமுண, லால் விஜேநாயக்கா, சந்திரபால குமார ஆகியோரும் இந்தச் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தனர்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment