பாவம், எடுபடாது விட்டதே வாசுவின் பேச்சு!
இலங்கைத் தேசிய கீதம் எக்காரணம் கொண்டும் மாற்றம் காணாது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (27) தெரிவித்தார்.
‘தேசிய கீதத்தை மாற்றியமைப்பதா இன்றைய காலத்தின் தலைப்பாக இருக்கிறது? அதனை மாற்றியமைப்பதால் என்ன இலாபம் காணப்போகிறோம்? யார் எதைச் சொன்னாலும் எந்தவொரு முறையிலும் தேசிய கீதம் மாற்றப்பட மாட்டாது, மாறவும் மாட்டாது.’ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரான வாசுதேவ நாணயக்காரவினால் கொண்டுவரப்பட்ட இந்தக் கருத்து அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டதோடு, அதனைக் கபினட் சபை ஏற்றுக் கொண்டுள்ளது போலவும் அவரால் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய தேசிய கீதம் இம்முறை இடம்பெறும் சுதந்திர தினத்தின்போது பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment