யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் என். ஜெயக்குமாரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது கடந்த முதலாம் திகதி இரவு 10 மணியளவில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், வீட்டிற்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் நடமாடியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டதாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜெப்ரி தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார், யாழ்.பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது., அவரது வீட்டுப் பகுதியில் பொலிஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment