ராகுல் டிராவிட், சுஷில்குமாருக்கு பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை!!
இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரது பெயர்களை இந்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். 16 ஆண்டு காலம் இந்திய அணியில் இடம்பெற்று பல்வேறு வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்தவர்.
அதே போன்று மல்யுத்தத்தில் 2008 ஆம் ஆண்டு, பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று சுஷில்குமாரும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 2009 ஆம் ஆண்டு இவருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரின் சாதனைகளுக்காக இப்போது பத்மபூஷன் விருதுக்கு விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் விஜயகுமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். மல்யுத்த போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர்களதும் பெயரும் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாரத் ரத்னா விருதுக்கு எந்த விளையாட்டு வீரரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment